உழவே உணவு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.
வாழைப்பழ கரைசல்
தயாரிக்கும் முறையும்
பயன்களும்...
தேவையானவை...
நல்ல நிலையில் உள்ள அல்லது அழுகிய தோலுடன் கூடிய வாழைப்பழம் ஒரு கிலோ
நாட்டு சர்க்கரை ஒரு கிலோ...
(எந்த அளவுக்கு வாழைப்பழமோ அதே அளவு நாட்டு சர்க்கரை)
செய்முறை....
வாழைப்பழத்தினை துண்டு துண்டாக நறுக்கி ஒரு பிளாஸ்டிக் வாளி அல்லது மூடியுடன் கூடிய பிளாஸ்டிக் டப்பாவில் போட்டு அதனுடன் நாட்டுச்சர்கரையையும் கொட்டி கையாலோ அல்லது ஒரு குச்சியாலோ நன்கு கலக்கிய பின்னர் கலவையை மூடியைக் கொண்டு டைட்டாக காற்று புகாதவாறு மூடி சூரிய ஒளி அதிகம் படாத இடத்தில் வைக்க வேண்டும்..
தினமும் ஒரு முறை கலவையை அப்படியே மூடியை கழட்டாமல் மேலும் கீழுமாக குலுக்கி விட வேண்டும்..
26 நாட்களுக்கு பிறகு கரைசலை எடுத்து முதலில் போர்வெல் நெட் கொண்டும் பிறகு வடிகட்டி கொண்டும் வடிகட்டிய பின்னர் ஒரு லிட்டருக்கு தண்ணீருக்கு 5 மி.லி என்ற ரேசியோவில் கலந்து செடிகள் மீது ஸ்ப்ரே செய்யலாம்...
இந்த கரைசல் மீன் அமினோ அமிலத்திற்கு மாற்றாக மீன்கவிச்சை,அசைவம் பிடிக்காதவர்கள் தயாரித்து பயன்படுத்தலாம்...
செடிகள் ஆரம்ப நிலையில் வளரும் கட்டத்தில் வாரம் 2 முறை இக்கரைசலை தெளித்து வந்தால் செடிகளைய வைரஸ் நோய் தாக்குதல் மற்றும் வளர்ச்சி குறைபாட்டில் இருந்து காக்கலாம்...
இது ஒரு பயிரூக்கியாகவும்,நோய் தடுப்பு கரைசலாகவும் பயன்படுகிறது.
எங்களிடம் இயற்கை மற்றும் பாரம்பரிய அரிசி உள்ளது. விரும்புவோர் எங்கள் இணையதள இணைப்பில் இருந்து வாங்கலாம். www.kandharam.co.in
Comments
Post a Comment